மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாக்கும் மூலிகை பால்

தேவையான பொருள்

துத்தி இலை ஒரு கைப்புடி அளவு
பால் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு துத்தி இலையை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
  • பிறகு அரைத்த துத்தி இலையை நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 50 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் பாலை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான பாலை தினந்தோறும் காலை குடித்து வந்தால் மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாகும்.