முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
பிறகு 50 கிராம் கோதுமையை நீரில் 24 மணி நேரம் நன்கு ஊற வைத்து அதன் தண்ணீரை மட்டும் தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு வெட்டி வேர் பொடி மற்றும் தனியா ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும்.
பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் பாலுடன் அரைத்த பொடி மற்றும் வடிகட்டி வைத்த கோதுமை தண்ணீரையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் கொதிக்க விடவும்.
பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இடுப்பு வலி உள்ள பெண்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் உணவிற்கு பின் 1 மணி நேரம் கழித்து 50 மி.லி முதல் 100 மி.லி வரை குடித்து வந்தால் இடுப்பு வலி முற்றிலுமாக நீங்கும்.