தேவையான பொருள்
| சுக்கு | 50 கிராம் |
| மிளகு | 5 கிராம் |
| திப்பிலி | 5 கிராம் |
| பெருங்காயம் | 5 கிராம் |
| வசம்பு | 5 கிராம் |
| சித்தரத்தை | 5 கிராம் |
| சீரகம் | 5 கிராம் |
| தனியா | 5 கிராம் |
| வாய் விடங்கம் | 5 கிராம் |
| கருஞ்சிரகம் | 5 கிராம் |
| ஏலக்காய் | 5 கிராம் |
| நெய் | 75 மி.லி |
| தேன் | 50 மி.லி |
| பசும் பால் | 200 மி.லி |
| பனை வெல்லம் | 100 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு நெய்,தேன்,பசும் பால் மற்றும் பனை வெல்லம் ஆகிய நான்கு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 200 மி.லி பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.மேலும் பாலுடன் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து பாகு தன்மை அடையும் வரை பால் மற்றும் பனை வெல்லதை நன்கு கலக்க வேண்டும்.
- பிறகு இதனுடன் இடித்த பொடியே சிறுக சிறுக சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்க வேண்டும்.
- பிறகு தேவையான அளவு தேன் மற்றும் நெய் ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக கலக்கி வந்தால் லேகியம் தயார் ஆகி விடும்.

