குறட்டை பிரச்சனையை தீர்க்கும் தும்பை இலையின் மருத்துவ பலன்கள்

தேவையான பொருள்

தும்பை இலை (சூரணம்) 50 கிராம்
அதிமதுரம் இலை (சூரணம்) 10 கிராம்
திப்பிலி (சூரணம்) 10 கிராம்
சுக்கு தூள் 10 கிராம்
சீரக தூள் 10 கிராம்
பசும் பால் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு தும்பை இலை,அதிமதுரம் இலை மற்றும் திப்பிலி ஆகிய பொருட்களை வெயிலில் நன்றாக காய வைத்து கொள்ள வேண்டும்.பிறகு இந்த பொருட்களை தனி தனியே இடித்து நன்றாக அரைத்து மேல குறிப்பிடப்பட்ட அளவுகளில் சூரணம் போல மாற்றி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த சூரணம் பொருட்களுடன் சுக்கு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து நன்கு பிசைந்து எடுத்து ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • மேலும் இந்த பொடியே அரைதேக்கண்டி எடுத்து 50 மி.லி பசும் பாலுடன் சேர்த்துக்கொண்டு தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் குறட்டை பிரச்சனையை முற்றிலுமாக தீர்த்து விடலாம்.