தேவையான பொருள்
| வெண்டைக்காய் | 1/2 கிலோ |
| மிளகாய் தூள் | 1 டேபிள் ஸ்பூன் |
| கரம் மசாலா | -1 டேபிள் ஸ்பூன் |
| மல்லித்தூள் | 1/4 ஸ்பூன் |
| அரிசி மாவு | 1/4 ஸ்பூன் |
| எண்ணை | தேவையான அளவு |
| உப்பு – | தேவையான அளவு |
செய்முறை
முதலில் வெண்டைக்காய் நீரில் கழுவி துணியால் துடைத்து நீள துண்டுகளாக்கி கொள்ள வேண்டும் .
பின் நறுக்கிய வெண்டைக்காயை ஒரு பாத்திரத்தில் போட்டு அத்துடன் கரம் மசாலா அரிசி மாவு மல்லித்தூள், சோள மாவு மிளகாய் தூள் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்கு கலந்து கொள்ள வேண்டும் .
வெண்டைக்காயில் நீள வாக்கில் உள்ளவாறு கீறி விட்டு நடுவில் கலந்து வைத்துள்ள மசாலாக்களை நடுவில் வைத்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும் .
பின் ஒரு வாணலியில் அடுப்பில் வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணை ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்துள்ள வெண்டைக்காய் கலவையை சேர்த்து பொன்னிறமாக நன்றாக வறுத்து இறக்கினால் வெண்டைக்காய் வறுவல் ரெடி .

