சத்து நிறைந்த கம்பு சாதம் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

கம்பு 500 கிராம்
உப்பு தேவையான அளவு
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு கம்பை எடுத்துக்கொண்டு நன்கு நீரினில் கழுவ வேண்டும்.மேலும் கம்பை 3 அல்லது 4 மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
  • உலர வைத்த கம்பை எடுத்து நறு நறு தன்மை வரும் அளவு லேசாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இதன் பிறகு வேறு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் லேசாக அரைத்த கம்பையும் சேர்த்துக்கொண்டு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு தேவையான அளவு உப்பையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கி விட வேண்டும்.பிறகு இதனை 15 நிமிடம் ஆர வைத்த பிறகு கம்பு சாதம் தயார் ஆகி விடும்.