தேவையான பொருள்
பன்னீர் | 50 மி.லி |
நார்த்தங்காய் | 100 கிராம் |
தேன் | 50 மி.லி |
கற்கண்டு | 50 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு நார்த்தங்காயை இரண்டு துண்டாக நறுக்கி அதனை பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- மேலும் இதனுடன் பன்னீர்,தேன் மற்றும் கற்கண்டு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த சாறுடன் கலந்த பொருட்களை மிதமான சூட்டில் சூடுப்படுத்தி கொதிக்க வைக்க வேண்டும்.
- மேலும் இந்த சாற்றை நன்கு பாகு தன்மை அடையும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.இவ்வாறு பாகு தன்மை அடைந்த சாற்றை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்து கொண்டு தினமும் இந்த சாற்றினை இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு அதனுடன் அரை டம்ளர் நீரை விட்டு கலக்கி குடித்த வந்தால் நெஞ்செரிச்சல் நீங்கும்.