உடல் எடை குறைய எளிய வழி வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

மிளகு 25 கிராம்
தனியா 25 கிராம்
தண்ணீர் 200 மி.லி
பனை வெல்லம் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  •  பிறகு மிளகு மற்றும் தனியா ஆகிய இரண்டு பொருட்களையும் எடுத்து நன்றாக பொன்னிறமாக தனி தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.மேலும் இந்த இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்கு பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இந்த நீருடன் ஒரு தேக்கரண்டி இடித்த பொடி மற்றும்  தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு ஒரு 3 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைத்த நீரை மூன்று வேலைகளிலும் உணவிற்கு முன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.