ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை பழங்கள்

காடுகளிலும், கழனிகளிலும், வெயிலிலும், மழையிலும் கடுமையாக உழைத்து தான் நமது முன்னோர்கள் நூறு வயது வாழ்ந்தனர் என்றால் அதனை நாம் சற்று சிந்திக்க வேண்டும். நவநாகரீக உலகில் இன்று அதிக நாள் உயிர் வாழ முடியாமல் போவதற்கு செயற்கையாக தயாரிக்கப்பட்ட உணவுகள் முக்கிய காரணம் என்பது புரியும்.

மக்கள் தொகை பெருகப் பெருக உணவுத் தேவைகளும் அதிகமாகிறது. இயற்கையான முறையில் விதை விதைத்து நாற்று உருவாக்கியவை இயற்கையின் போக்கிலேயே வளரவிட்டு அறுவடை செய்த தானியங்களில் மனித குலம் வாழ தேவையான ஊட்டச்சத்துக்கள் தாராளமாக கிடைத்தன.

ஆகவே இயற்கையாக உற்பத்தி செய்யப்படுகின்ற உணவு வகைகளில் தான் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைக்கின்றன. எனவேதான் இன்றைய சமூகம் இதை புரிந்து கொண்டு இயற்கை சார்ந்த உணவுகளை உண்ண வேண்டும்.

ஆகவே நாமும் இனி வரும் காலங்களில் சத்தான உணவுகளான சோளம் ,கம்பு, கேழ்வரகு, முளைக்கட்டிய பயிறு வகைகள், கீரைகள் ,நாட்டு பழங்கள் ஆகியவற்றை உண்டு உடல் ஆரோக்கியத்தை பேணுவோம். பழமையைப் போற்றுவோம்!! பாரம்பரியத்தை காப்போம்!!

உடலுக்கு மிகுந்த பயனளிக்கும் பழங்கள்

சப்போட்டா

நோய் கிருமிகளை அண்டவிடாது.

நாவல் பழம்

கல்லீரல் கோளாறுகளை நீக்கும், குடல் புண் மற்றும் நீரிழிவுக்கு அருமருந்து.

சீதாப் பழம்

மலச்சிக்கல் நீக்கும், பருக்களை அகற்றும் தலைமுடி நீண்டு வளர உதவும், பேன் பொடுகு தொல்லைகளை நீக்கும், குளிர் காய்ச்சலை குறைக்கும் இதயத்தை பலப்படுத்தும்.

எலுமிச்சை பழம்

கண்களை பலப்படுத்தும், நீர் இழப்பைத் தடுக்கும், கல்லீரலை பாதுகாக்கும் ,ரத்த ஓட்டத்தை சீராக்கும், தீராத வயிற்று கடுப்பு நீக்கும்.

சாத்துக்குடி

பசியை தூண்டும், மூளைச் செல்களை பலப்படுத்தும், ரத்த அழுத்தத்திற்கு நல்லது, கர்ப்பப்பையை பலமாக்கும்.

ஆரஞ்சு

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், வாழ்நாளில் இளமையை நீட்டிக்கும், பசியை தூண்டும் , மலச்சிக்கலைப் போக்கும், பல் சொத்தை வராது.

பப்பாளி

சிறுநீர் கல்லடைப்புக்கு மருந்து, நரம்புகள் பலம் ஆகும் ஆண்மை விருத்தியடையும், ஞாபக சக்தி மேம்படும் மாதவிடாய் கோளாறுகள் நீக்கும்.

பேரிச்சம்பழம்

இரத்தம் விருத்தியாகும், சருமம் பளபளக்கும், கண் கோளாறுகள் வராது, இருமல் கபம் போன்றவைகளுக்கு நல்ல மருந்து.

கொய்யா பழம்

இதயத்திற்கு வலுவூட்டும், வாந்தி பேதி நிற்கும், பற்களுக்கு நல்லது, அஜீரணக் கோளாறுகளை நீக்கும், விக்கலுக்கு நல்ல மருந்து.

சப்போட்டா
நாவல்பழம்
சீதாப்பழம்