தேவையான பொருள்
நெல்லிக்காய் | 20 |
எண்ணெய் | 4 டீஸ்பூன் |
கடுகு | 1 டீஸ்பூன் |
வெந்தையம் | 1/4 டீஸ்பூன் |
பெருங்காயத் தூள் | 1/2 டீஸ்பூன் |
மிளகாய்த் தூள் | 5 டீஸ்பூன் |
உப்பு | 3 டீஸ்பூன் |
வெல்லம் | 1 டீஸ்பூன் |
செய்முறை
நெல்லிக்காய்களைக் கடாயில் தண்ணீர் ஊற்றி 20 நிமிடங்கள் வேகும் வரை கொதிக்க விடவும். வெந்ததும் அவற்றைத் தண்ணீரிலிருந்து வடிகட்டி காயவிடவும்.
சூடு தணிந்ததும் கொட்டைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதை ஜாரில் கொட்டி மிக்ஸியில் மைய அரைத்து தனியாக எடுத்துக்கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு பொரிந்ததும் வெந்தையம் சேர்க்கவும்.
பின் மிளகாய்த் தூள் சேர்த்துக் கிளரவும். பின் அரைத்து வைத்துள்ள நெல்லிக்காய் பேஸ்டை கொட்டி நன்கு கிளறவும்.
தற்போது உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும். தொக்கு நன்கு கருஞ்சிவப்பு நிறத்தில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறிக்கொண்டே இருக்கவும்.