முதுகு தண்டு வலிமை பெற உதவும் பாட்டி வைத்தியம்

தேவையான பொருள்

பூண்டு(பற்கள்)5 எண்ணிக்கை
பால்200 மி.லி
மிளகு தூள்சிறிதளவு
மஞ்சள் தூள்சிறிதளவு
தேன்தேவையான அளவு
உலர் திராட்சை10 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் இடித்த பூண்டையும் சேர்த்துக்கொண்டு நன்கு வேக வைக்கவும்.
  • பிறகு இதனுடன் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் மிளகுதூள் சேர்த்துக்கொண்டு 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு இதனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • பிறகு இதனுடன் உலர் திராட்சை சேர்த்துக்கொள்ளவும்.
  • இப்போது ஒரு சுவையான பானம் தயார் ஆகிவிடும்.
  • இதனை முதுகு வலி உள்ளவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் காலை மற்றும் இரவு குடித்து வந்தால் முதுகு வலி நீங்கி முதுகு தண்டு வலிமை பெறும்.