காய்ச்சலை சரி செய்யும் சுண்டைக்காய்

தேவையான பொருள்

பச்சை சுண்டைக்காய்100 கிராம்
துவரம் பருப்பு100 கிராம்
புளிஎலுமிச்சை பழம் அளவு
சாம்பார் போடி4 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு
எண்ணெய்4 டீஸ்பூன்
உப்புதேவையான அளவு

செய்முறை

  • துவரம்பருப்பை வேக வைக்கவும்.

  • கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காயை தட்டி போட்டு வதக்கவும்.

  • புளியைக் கரைத்து இதனுடன் உப்பு சாம்பார் பொடி சேர்த்து கொதிக்க விடவும்.

  • பிறகு வேக வைத்த பருப்பை சேர்க்கவும்.

  • மீதமுள்ள எண்ணையில் கடுகு வெந்தயம் கடலைப்பருப்பை தாளித்து சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து கொதி விட்டு இறக்கவும்.