முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஆளி விதையை நீரில் நன்கு கழுவி சிறிது நேரம் உலர்த்தி விடவும். இதன் பிறகு ஆளி விதையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
பிறகு ஆளி விதை உடன் சீரகம் மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு அரைத்து பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை மிதமான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இந்த நீரில் அரைத்த பொடியை ஒரு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
இவ்வாறு கிடைத்த நீரை தினமும் காலையில் குடித்து வந்தால் பெண்கள் உடல் எடை படிப்படியாக குறையும்.