ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சுக்கு 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
கறிவேப்பிலை 10 இலைகள்
பெருங்காயம் 5 கிராம்
ஏலக்காய் 5 கிராம்
உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சுக்கு,மிளகு,திப்பிலி மற்றும் கறிவேப்பிலை ஆகிய பொருட்களையும் ஒன்று சேர சேர்த்துக்கொண்டு நன்கு வறுக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் பெருங்காயம்,ஏலக்காய் மற்றும் இந்துப்பு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும்.
  • இதன் பிறகு பொன்னிறமாக வறுத்து எடுத்த பொருட்களை ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவாக்கப்பட்ட அன்னப்பொடியை தினமும் உணவுடன் அரைத்தேக்கரண்டி சேர்த்துக்கொண்டால் ஜீரணம் எளிதாக நடைபெறும்.
உப்பு
ஏலக்காய்
மிளகு
சுக்கு
கறிவேப்பிலை
திப்பிலி
பெருங்காயம்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

sixteen + 7 =

Scroll back to top