உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும் சோற்று கற்றாழையின் நாட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சோற்று கற்றாழை 50 கிராம்
தயிர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சோற்று கற்றாழை தோலை சீவி அதன் உட்பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 7-8 முறை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
  • நறுக்கிய கற்றாழையை நன்கு அரைத்து அதனை சாறு போல மாற்ற வேண்டும்.
  • மேலும் கற்றாழை சாற்றுடன் 100 மி.லி தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • மேலும் இதனை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எப்பொழுதும் குளிர்ச்சியாக இருக்கும்.

பயன்கள்:

1) உடல் சூட்டை குறைக்கும் .

2) குடல் புண்களை முற்றிலுமாக குணப்படுத்தும்.

3) தலை முதல் கால் வரை தோல் பளபளக்கும் தன்மையை பெறும்.