முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் அரை தேக்கரண்டி ஓமம் மற்றும் துளசி இலை ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.
மேலும் பாத்திரத்தை ஒரு மூடியால் முடி வைக்க வேண்டும்.ஆவி வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
பிறகு முடியே விலக்கி விட்டு வெளியே வரும் ஆவியில் முகம் படும்படி 15 நிமிடம் வைக்க வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் தலை நீர் ஏற்றம் முற்றிலுமாக குறைந்து விடும்.