தேவையான பொருள்
திப்பிலி | 2 எண்ணிக்கை |
தண்ணீர் | 100 மி.லி |
கீழாநெல்லி சாறு | 5 மி.லி |
சீரகம் | 5 கிராம் |
எலுமிச்சை | அரைத்துண்டு |
தேன் | தேவையான அளவு |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை லேசான சூட்டில் கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக இடித்த திப்பிலி மற்றும் 5 மி.லி கீழாநெல்லி சாறு ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதனுடன் அரை தேக்கரண்டி சீரகமும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
- இவ்வாறு உருவான நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் எலுமிச்சை பழச்சாறு 10 சொட்டு இட வேண்டும்.பிறகு தேவையான அளவு தேனையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான நீரை ஒருநாள் முழுவதும் அரை தேக்கரண்டி அளவு குடித்து வந்தால் அடிக்கடி வாந்தி ஏற்படுவதை தடுக்கலாம்.