தலை முடி கொட்டுதல், அரிப்பு, பொடுகு இவற்றிற்கான எளிய தீர்வு.

தேவையான பொருள்

பீட்ரூட் (நறுக்கிய சிறுதுண்டு) ஒரு கைப்புடி அளவு
தேங்காய் (நறுக்கிய சிறுதுண்டு) ஒரு கைப்புடி அளவு
மிளகு 10 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு பீட்ரூட்,தேங்காய் மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் சிறுதுண்டு போல் நறுக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இவ்வாறு அரைத்த பொருட்களை நன்றாக பிழிந்து அதன் சாறு மட்டும் தனியே எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாறை தலையில் நன்றாக தேய்த்து 15 நிமிடம் உலர வைத்து விட்டு பின்னர் குளித்து வந்தால் தலை முடி கொட்டுதல், அரிப்பு, பொடுகு இவற்றை சரி செய்யலாம்.