தேவையான பொருள்
குங்கிலியம் | 10 கிராம் |
ஏலக்காய் | 25 கிராம் |
கோரைக்கிழங்கு | 20 கிராம் |
திப்பிலி | 10 கிராம் |
கற்கண்டு | 20 கிராம் |
சிவப்பு சந்தன தூள் | 10 கிராம் |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவு எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு கற்கண்டு தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- இதனை மிதமான சுட்டில் இரண்டு நிமிடம் சூடுபடுத்தவும்.
- மேலும் இந்த பொருட்களை ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.
- மேலும் இதனுடன் கற்கண்டு சேர்த்துக்கொண்டு இடித்து பொடியாக்கி எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு இதனை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- கடுமையான வாந்தி உள்ள நேரங்களில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை எடுத்துக்கொண்டு வெந்நீரில் குடித்து வர வாந்தி படிப்படியாக குறையும்.
- மேலும் மலக்குடல் புழுக்கள் முற்றிலுமாக வெளியேற்ற படும்.