தேவையான பொருள்
சுக்கு | 10 கிராம் |
இலவங்கப் பட்டை | 10 கிராம் |
கிராம்பு | 5 கிராம் |
திப்பிலி | 5 கிராம் |
மிளகு | 5 கிராம் |
அமுக்கரா கிழங்குப்பொடி | 5 கிராம் |
பனை வெல்லம் | தேவையான அளவு |
தண்ணீர் | 100 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- சுக்கு,லவங்கப்பட்டை,கிராம்பு,திப்பிலி மற்றும் மிளகு ஆகிய ஐந்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடாக்க வேண்டும்.மேலும் இதனுடன் நன்றாக பொடியாக்கப்பட்டப் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு தண்ணீரை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும்.
- இவ்வாறு கிடைக்கபெற்ற நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- இதன் பிறகு தனியான பாத்திரத்தில் தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். மேலும் இதனுடன் வடிகட்டிய நீரையும் சேர்த்துக்கொண்டு சுண்ட காய்ச்ச வேண்டும்.
- இவ்வாறு உருவான மருத்துவ நீரை காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலைகளிலும் ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் இரத்த குழாய் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.