முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு கழற்சிக்காய் (உட்பகுதி) மற்றும் மிளகு இந்த இரண்டு வகையான பொருட்களையும் தனி தனியே அரைத்து வெவ்வேறு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு தேக்கரண்டி கழற்சிக்காய் (உட்பகுதி) பொடி மற்றும் அரை தேக்கரண்டி மிளகு பொடி இரண்டையும் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து நன்கு கலக்கவும்.
இவ்வாறு உருவான மருந்தை சிறியதாக உருண்டை பிடித்துக்கொள்ளவும்.தினந்தோறும் ஒரு உருண்டை சாப்பிட்டு 50 மி.லி தண்ணீர் குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகும்.