மஞ்சள் மற்றும் கடலைமாவை பால் அல்லது தண்ணீரில் கலந்து முகத்தில் பூசி, 15 அல்லது 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும். இது முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி பொலிவைத் தரும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயையும் சர்க்கரையையும் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் தடவவும். இதை வாரந்தோறும் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு, முகம் பொலிவு பெரும்.
சோற்றுக்கற்றாழை
சோற்றுக்கற்றாழையின் சதையை நன்கு அறைத்து ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேனைக்கலந்து முகத்தில் பூசவும். இது முகத்தின் சூட்டை தனித்து சருமத்தை மிருதுவாக்கும்.
எலுமிச்சைச் சாறு
எலுமிச்சை சாறை சர்க்கரையுடன் சேர்த்து கருமை ஏற்பட்ட இடங்களில் தடவவும். இது சருமம் கருமை அடைவதை நாளடைவில் குணப்படுத்தி விடும்.
பப்பாளி
பப்பாளியை நன்கு மசித்து தேன் மற்றும் சந்தனத்துடன் கலந்து முகத்தில் பூசவும். இது சருமத்தை மிருதுவாக்குவதுடன் பொலிவையும் கூட்டும்.