குமட்டல்,வாந்தி,பசி இன்மைக்கு மிக எளிய மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

வில்வ இலை 6 இலைகள்
ஏலக்காய் 2 எண்ணிக்கை
நெல் பொரி ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 50 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • இதன் பிறகு 50 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்கவேண்டும்.
  • மேலும் இதனுடன் நெல் பொரியை ஒரு கைப்புடி அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும்.இதன் பிறகு நன்கு இடித்த ஏலக்காய் மற்றும் நன்றாக நறுக்கிய வில்வ இலையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு நீரை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு கிடைக்கப்பட்ட நீரை வாந்தி மற்றும் குமட்டல் உள்ள நேரங்களில் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் வாந்தி மற்றும் குமட்டல் நீங்கும்.
ஏலக்காய்
தண்ணீர்
வில்வ இலை
நெல் பொரி