முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு முசுமுசுக்கை இலையை சிறிய துண்டாக நறுக்கி ஒரு கல்வத்தில் இட வேண்டும்.மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக இடிக்க வேண்டும்.
இதன் பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.மேலும் இதனுடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்றாக சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு கிடைத்த நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் சிறியவர்கள் 30 மி.லி மற்றும் பெரியவர்கள் 60 மி.லி என்கிற வீதத்தில் குடித்து வந்தால் சளி அறவே நீங்கும்.