இலவங்க பட்டை தேநீரின் மருத்துவ பயன்கள்

தேவையான பொருள்

இலவங்க பட்டை 50 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு இலவங்க பட்டையை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • மேலும் இதனுடன் நன்றாக இடித்த இலவங்க பட்டை பொடியை ஒரு 50 கிராம் சேர்த்துக்கொண்டு 100 மி.லி நீரை 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • இவ்வாறு வடிகட்டிய நீரை தினந்தோறும் குடித்து வந்தால் சர்க்கரை நோயின் அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.