முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு அண்ணாச்சி பூவை எடுத்துக்கொண்டு ஒரு கல்வத்தில் வைத்து இடித்து நன்றாக பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி நீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
மேலும் இதனுடன் நன்றாக இடித்த அண்ணாச்சி பூவின் பொடியை ஒரு 10 கிராம் சேர்த்துக்கொண்டு 100 மி.லி நீரை 50 மி.லி வரும் வரை நன்கு சுண்ட காய்ச்சி ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வடிகட்டிய நீரை தினந்தோறும் குடித்து வந்தால் உடலின் நோய் எதிர்பாற்றலை அதிகரிக்க செய்யலாம்.