சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்

தேவையான பொருள்

ஓமம் 100 கிராம்
சோம்பு 50 கிராம்
சுக்கு 10 கிராம்
ஏலக்காய் 10 கிராம்
கிராம்பு 5 கிராம்
இலவங்கப்பட்டை 5 கிராம்
பால் 100 மி.லி
தண்ணீர் 100 மி.லி
தேயிலை இரண்டு தேக்கரண்டி
நாட்டு சர்க்கரை தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்திக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் தவிர மீதமுள்ள பொருட்களை மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு  சுக்கு மற்றும் ஓமம் ஆகிய இரண்டு பொருட்களையும் வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை நன்கு அரைத்து பொடியாக்கி ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி பால் மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமாக சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் இரண்டு தேக்கரண்டி தேயிலை சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒருதேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும். 
  • மேலும் இதனுடன் நாட்டு சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு தேநீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த தேநீரை தொடர்ந்து காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகள் குடித்து வந்தால் சுவாசத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க முடியும்.