நலம் தரும் நாவல்பழம்

“ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் நாவல் பழ சீசன்தான். நாவல் பழத்தில் கல்சியம் அதிக அளவில் இருக்கிறது. இந்தப் பழத்தை அடுத்து சீதா பழத்தில்தான் கல்சியம் இருக்கிறது. இது தவிர சோடியம், தாமிரம் ஆகியவை கணிசமான அளவில் உள்ளது. விட்டமின் B1, B2, B6 ஒன்றாக உள்ள மிகவும் அரிதான பழம் இது’’

“கல்சியம், எலும்புகளுக்கு உறுதியைக் கொடுப்பதுடன், உடலை வலிமையாக்கும். இரத்தத்தைச் சுத்திகரித்து இரத்த விருத்தியடையச் செய்யும். இரத்தசோகைக்கு மிகச்சிறந்த மருந்தே நாவல் பழம்தான். இதிலுள்ள விட்டமின் சி உணவிலிருந்து இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை அதிகரிக்கும்.

நாவல் பழத்திலுள்ள ‘ஜம்போலினின்’ எனும் ‘குளுக்கோசைடு’ உடலில் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்றும் செயல்பாட்டைத் தடுக்கிறது. இதனால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். சர்க்கரை நோய் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் நாவல் பழத்தை உணவாக அல்லாமல் மருந்தாக பத்தியமிருந்து 1 மண்டலத்துக்குச் (48 days)சாப்பிட்டு வர, சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் இருக்கும். நாள்பட்ட சர்க்கரை நோய் உடையவர்கள் நாவல் பழ விதையை காயவைத்து பொடியாக்கி, புளித்த மோரில் கலந்து குடிக்கலாம்.

பற்பல நோயை குணமாக்கும் நாவல் பழம்

நாவல் பழத்தில் சதையில் உள்ள மருத்துவகுணத்தை விட அதன் விதையிலே அதிகம் உள்ளது. பழத்தை உண்ணும் போது ஐந்தாறு கனியையாவது விதையுடன் உண்பது பலன் கிடைக்கும்.

நாவல் பழத்தை சாப்பிட மூளை பலமாகும். நல்ல ஜீரண சக்தி கிடைக்கும். குறிப்பாக பழத்தை கசாயம் போல் தயாரித்து சாப்பிடும்போது வாயுத்தொல்லை நீங்கும். மண்ணீரல் வீக்கத்தால் பாதிக்கப் பட்டவர்கள், தொடர்ந்து பல காலங்களாக கழிச்சல் நோய் உள்ளவர்கள் நாவல் பழத்தை சாப்பிட்டு வர குணமடையலாம். பழச்சாறுடன் தேன் கலந்து குடிக்கும் போது வெயிலால் உடம்பில் ஏற்படும் அனல் குறையும்.

நாவல் விதையை காயவைத்து பொடியாக்கி சலித்து பத்திப்படுத்தி வைத்துக் கொண்டு அரைத் தேக்கரண்டி அளவு உணவு உட்கொள்ளவதற்கு முன் உட்கொண்டு உணவருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

பொடியாக்கிய நாவல் விதையை ஆடுதின்னாபாலை இலைச் சாற்றில் இட்டு கொஞ்சம் கொஞ்சமாக அரைத்து அதை பட்டாணி அளவில் உருண்டைகளாக்கி காயவைத்துக் கொண்டு அதை உணவு உட்கொள்ளவதற்கு முன் ஒருஉருண்டை அல்லது அரை உருண்டை என வயதிற்கு ஏற்றார் போல பயன்படுத்தலாம்.

நாவல் கொட்டையுடன் மாங்கொட்டையும் சேர்த்து சம அளவு உலர்த்திய சூரணத்தில் 5 மில்லி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3-6 நாளில் சீதபேதி , வயிற்றுக் கடுப்பு, வயிற்றோட்டம், நீரிழிவு குணமாகும். நாவல் மரப்பட்டைத் தூளை மோரில் கலந்து குடிக்க, பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு தீரும்.

நாவல் பழம் உடல்நல நன்மைகள்

நாவல் பழத்தின் துவர்ப்புச் சுவை ஒரு சிறப்பு அம்சமாகும். நாவல் பழம் இரத்தத்தைச் சுத்தப்படுத்தும். இரத்தத்தில் இரும்புச்சத்தை அதிகரிக்கும். இதனால் இரத்தத்தின் கடினத் தன்மை மாறி இலகுவாகும். மேலும் இரத்தத்தில் கலந்துள்ள இரசாயன வேதிப் பொருட்களை நீக்கி சிறுநீர் மூலம் வெளியேற்றும்.

சிறுநீரகத்தை சீராக செயல்பட வைக்கும். மலச்சிக்கலைப் போக்கும். மூல நோயின் பாதிப்பு உள்ளவர்கள் நாவல் பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், மூல நோயின் தாக்கம் குறையும்.

நன்கு பழுத்த நாவற்பழத்தை, உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவை குணமாகும்.

அஜீரணக் கோளாறுகளைப் போக்கி, குடல் தசைகளை வலுவடையச் செய்யும்.

தூக்கமின்றி அவதிப்படுபவர்கள், நாவல் பழத்தை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால், தூக்கமின்மை நீங்கும்.

மெலிந்த உடல் உள்ளவர்கள் தினமும் நாவல் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் உடல் தேறும்.

நாவல்பழம் வியர்வையைப் பெருக்கும். சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தைக் குறைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

நாவல் பட்டையை இடித்து நீர் விட்டு கொதிக்கவைத்து வடிகட்டி குடிநீராக அருந்தி வந்தால் நீரிழிவு நோயினால் உண்டான பாதிப்புகள் நீங்கும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பைப் பாதிப்புகளைப் போக்கும்., எனவே, நாவல்பழம் கிடைக்கும் காலங்களில் அதனை வாங்கி உண்டு அதன் பயன்களைப் பெறுவோம்.

Nutrients in 100 g of jamun fruits:

Water – 83.13 mg

Food energy – calories – 60 mg

Protein – 0.72 mg

Fat – 0.23 mg

Carbohydrates – 15.56 mg

Dietary fiber – 0.00 mg

Ash – 0.36 mg

Minerals:

Calcium – 19.00 mg

Magnesium – 15.00 mg

Potassium – 79.00 mg

Iron – 0.19 mg

Phosphorus – 17.00 mg

Sodium – 14.00 mg

Vitamins:

Vitamin A – 3.00 mg

Vitamin B1 (Thiamin) – 0.01 mg

Vitamin B2 (Riboflavin) – 0.01 mg

Vitamin B3 (Niacin) – 0.26 mg

Vitamin B5 (Pantothenic Acid) – 0.00 mg

Vitamin B6 – 0.04 mg

Vitamin C – 14.30 mg

நன்றி ….வாழ்க வளமுடன் ….. %