தேவையான பொருள்
சுக்கு | 100 கிராம் |
அதிமதுரம் | 100 கிராம் |
சித்தரத்தை | 30 கிராம் |
கடுக்காய் பொடி | 30 கிராம் |
மஞ்சள் | 10 கிராம் |
திப்பிலி | 5 கிராம் |
ஓமம் | 5 கிராம் |
கிராம்பு | 5 கிராம் |
மிளகு | 5 கிராம் |
கற்பூரவள்ளி இலை | 5 எண்ணிக்கை |
புதினா இலை | 10 எண்ணிக்கை |
எலுமிச்சை | சிறிய துண்டு |
இஞ்சி | சிறிய துண்டு |
தண்ணீர் | 400 மி.லி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி தவிர மீதம் உள்ள எல்லா பொருட்களையும் தனித்தனியே நன்கு வறுத்துக்கொள்ளவும்.
- வறுத்த பொருட்களை நன்கு அரைத்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
- பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
- மேலும் நீரில் ஒரு தேக்கரண்டி அரைத்த பொடியை சேர்த்துகொண்டு நன்கு கொதிக்க விடவும்.
- மேலும் கொதிக்கும் நீருடன் கற்பூரவள்ளி இலை,புதினா இலை,எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகிய பொருட்களையும் சேர்த்து கொதிக்க விடவும்.
- மேலும் நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீருடன் சிறிதளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கலக்கவும்.
- இப்போது அருமையான மூலிகை சாறு தயார் ஆகி விடும்.குழந்தைகளுக்கு 50 மி.லி மற்றும் பெரியவர்களுக்கு 100 மி.லி குடிக்கலாம்.