முக்கனிகளில் ஒன்றாகப் போற்றப்படும் மாம்பழம் எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டுள்ளது. வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே, மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. பற்களுக்கும், ஈறுகளுக்கும் வலிமை தருவதோடு, வாய் புண்களைக் குணமாக்குவதில் மாம்பூக்கள் மிகச் சிறந்த மருந்து பொருளாக விளங்குகின்றன..
வைட்டமின் சத்துக்களும், தாது உப்புகளும் கொண்டுள்ள மாம்பழத்தைப் போலவே மாம்பூக்களும் மருத்துவ குணம் கொண்டுள்ளன. தொண்டையில் புண் ஏற்பட்டு எதையும் சாப்பிடக்கூட முடியாமல் இருப்பவர்கள், மாம்பூக்களை பறித்து நன்றாக தண்ணீரில் சுத்தம் செய்யவேண்டும். அதனை நன்கு நீரில் கொதிக்க வைத்து பின்னர் வடிகட்டிக்கொண்டு அதில் எலுமிச்சம் பழத்தின் சாறினை பிழிந்து விடவேண்டும். அந்தத் தண்ணீரை நன்றாக தொண்டைக்குள் இறங்குமாறு கொப்பளிக்க தொண்டை வலி குணமடையும்.
உலர்ந்த மாம்பூவை நெருப்பிலிட்டு அதன் புகையை வீடு முழுவதும் காண்பிக்க கொசுத் தொல்லை ஒழியும்.
உலர்ந்த மாம்பூக்களை நன்றாக பொடி செய்து மோரில் கலந்து பருகவேண்டும். தினமும் மூன்று வேளை பருகிவர வாய்ப்புண், வயிற்றுப்புண் காணாமல் போய்விடும்.
மாம்பூ குறிப்பாக நீரிழிவு நோய்க்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. தொடர்ந்து பல நாட்கள் பயன்படுத்தும்போது இதன் நல்ல பயனைக் கண்டுணரலாம். மாம்பூ, நாவல் பழக்கொட்டை, மாந்தளிர் மூன்றையும் சம அளவாக சேகரித்து வெயிலில் காயவைத்து இடித்து, தினம் அதிகாலை வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி அளவு வெந்நீரில் பருகவும்.
மாம்பூ, மாதுளம் பூ மாந்தளிர் வகைக்கு 5 கிராம் சேகரித்து நீர் விட்டு மைப்போல் அரைத்து அதனை பசும்பாலில் கலந்து காலை, மாலை 2 நாட்கள் சாப்பிடவேண்டும். இதன் மூலமாக சீதபேதி நீங்கிவிடும்.