மிகவும் சுவையான முருங்கை தேநீர் தயாரிப்பு முறை

பயன்கள்:

1)உடல் எடை, இரத்த அழுத்தம் குறையும்.

2)உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.

3)முருங்கைக்கீரையில் இருக்கும் புரதம் தலை மற்றும் கூந்தலுக்கு நீர் சத்தினை தருகிறது.

4)இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவும்.

5)மனதுக்கு தேவையான ஆற்றலை வழங்கி சோர்வை விரட்டும்.

தேவையான பொருள்

முருங்கைக்கீரை பொடி ஒரு தேக்கரண்டி
கிரீன் தேநீர் பொடி ஒரு தேக்கரண்டி
புதினா இலைகள் 4 எண்ணிக்கை
எலுமிச்சை சாறு 2 தேக்கரண்டி
சர்க்கரை 1 தேக்கரண்டி
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் முருங்கைக்கீரை பொடி கிரீன் தேநீர் பொடி மற்றும் புதினா இலை ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.
  • பிறகு இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.
  • பிறகு தேநீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது உடலுக்கு சுறுசுறுப்பை தரும் முருங்கை தேநீர் தயார் ஆகிவிடும்.
  • இதில் சாதாரண கீரையில் இருப்பதை விட மூன்று மடங்கு இரும்பு சத்து நிறைந்திருக்கிறது.
கிரீன் தேநீர் பொடி
புதினா இலைகள்
சர்க்கரை
தண்ணீர்
முருங்கைக்கீரை பொடி