தேவையான பொருள்
| பப்பாளி பழம் | அரை துண்டு |
| அண்ணாச்சி பழம் | அரை துண்டு |
| தேங்காய் | சிறிய துண்டு |
| பூசணி விதை | 10 கிராம் |
| இலவங்கம் | 3 எண்ணிக்கை |
| வாழை பழம் | 2 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு பப்பாளி பழம்,அண்ணாச்சி பழம் மற்றும் வாழை பழம் ஆகியவற்றின் தோலை நீக்கி சிறிய துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
- மேலும் இதனை போல தேங்காய் துண்டையும் சிறியதாக நறுக்கிக்கொள்ளவும்.
- மேலும் நறுக்கிய பொருட்களுடன் பூசணி விதை மற்றும் இலவங்கம் ஆகிய இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு சாறு போல அரைத்துக்கொள்ளவும்.
- இப்போது சுவையான இனிப்பு பானம் தயார் ஆகிவிடும்.
- இந்த பானத்தை தொடர்ந்து மாதம் ஒரு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் குடல் புழுக்களை எளிதாக விரட்டலாம்.

