ஆவாரம் பூ, கடலைமாவு இரண்டையும் சமமாக எடுத்து பசும் பாலில் அரைத்து முகத்தில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து இளம் சூட்டில் கழுவி சுத்தமான மெல்லிய துணியால் துடைத்து எடுக்க முகம் பளபளப்பு ஆகும்.
2.குடி போதை மறக்க:
மிளகாய்ச் செடி, இலவங்கபட்டை, சர்க்கரை, நெல்லிக்காய்தூள், கொத்தமல்லி, ஆகிய பொருட்களை வாழைசாறு உடன் சேர்த்துக்கொண்டு காலை, மாலை, 100 மில்லி அளவு குடித்துவர 30 நாட்களில் பலன் கிடைக்கும்.
3.கால் ஆணிக்கு மருந்து
வசம்பு, சுட்டு எடுத்த மஞ்சள், மருதாணி இலை இவைகளை சமமாக எடுத்து மைபோல் அரைத்து கால் ஆணிகளில் கட்டிவர குணமாகும்.
4.தலை பொடுகு போக
50 கிராமம் வேப்பம் பூவை உரலில் போட்டு இடித்து, 250 மில்லி தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி தலையில் வருடி தேய்த்து வர பொட்டு, பொடுகு ஒழியும்.
5.தலைவலி நீங்க
இஞ்சியை அரைத்து அதனை நீரில் கொதிக்க விடவும். அதில் 1 தேக்கரண்டி தேனை கலந்த்து பருகவும். இதனை தொடர்ந்து செய்தால் தலை வலி முற்றிலுமாக நீங்கும்.