கடுமையான வயிற்றுப்போக்கு குணமாக மருத்துவ குறிப்பு

தேவையான பொருள்

ஓமம் 50 கிராம்
மிளகு 50 கிராம்
பனை வெல்லம் 50 கிராம்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஓமம் மற்றும் மிளகு ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • மேலும் வறுத்த பொருட்களுடன் பனை வெல்லமும் சேர்த்து நன்கு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை அரைத்தேக்கரண்டி எடுத்துக்கொண்டு தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் சாப்பிட்டு வந்தால் கடுமையான வயிற்றுபோக்கை எளிதாக குணப்படுத்தலாம்.
  • இதை போல கடுக்காய் தூள் மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்றுபோக்கை எளிதாக குணப்படுத்தலாம்.