fbpx

சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவு வகைகள்!

தயிர்

தயிர் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒரு சிறந்த உணவாகும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி இதய நோய் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கின்றது. தினமும் தயிர் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடையை குறைக்க உதவி செய்கிறது. இதன் மூலம் டைப் 2 வகை சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம்.

பருப்பு வகைகள்

அனைத்து வகையான பருப்பு வகைகள் உடலுக்கு சத்தானவை. இதில் பைபர் மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய புரதங்கள் உள்ளது. பாதாம், முந்திரி மற்றும் வால்நட் போன்ற பருப்பு வகைகள் சர்க்கரை நோயாளிகள் ஏற்றுக் கொள்ளக் கூடிய உணவாகும்.

கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள்

நெத்திலி வகை மீன்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவுகள் ஆகும். மேற்கண்ட மீன் வகைகள் அனைத்தும் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் ஆகும். சீரான இடைவெளியில் இந்த உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் நீரிழிவு நோயினால் வரும் ஹார்ட் அட்டாக் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். மேலும் மீன்கள் அதிக புரதச்சத்து நிறைந்த உணவு வகையாகும். இது வளர்ச்சிதை மற்ற குறைபாட்டை குறைக்க உதவும்.

பூண்டு

பூண்டு ஒரு சத்தான மூலிகை மற்றும் பல நல்ல பலன்களை உள்ளடக்கியது. இது ரத்த கொதிப்பை கட்டு படுத்த உதவுகிறது. பூண்டு ரசம் மற்றும் உணவு வகைகளில் பூண்டினை அடிக்கடி சேர்த்து உண்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்த உதவும். இது வீக்கம், கொழுப்பு ஆகியவற்றை கரைக்க உதவுகிறது. நீங்கள் இதை தொடர்ந்து உண்ணும் போது உங்களது நீரிழிவை நிரந்தரமாக சரி செய்யாவிட்டாலும் வேறு கோளாறுகளை தவிர்க்கலாம்.

நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

sixteen − six =