தேவையான பொருள்
தயிர் | சிறிதளவு |
சீரகம் | 1 தேக்கரண்டி |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
- பிறகு சிறிது தயிரில் 1 தேக்கரண்டி சீரகப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதனை தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம். மேலும் சில வழிமுறைகள்:
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து குடித்து வர, உடல் எடை குறைய ஆரம்பிப்பதை நன்கு உணர முடியும்.
- 4-5 பூண்டை ஒரு டம்ளர் பாலில் போட்டு பாதியாக சுண்டும் வரை கொதிக்க வைத்து இறக்கி, பாலுடன் பூண்டை சாப்பிட வேண்டும். இதனால் பூண்டு உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
- புடலங்காயை தினமும் உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடல் எடையைக் குறைக்க உதவும். அதிலும் புடலங்காய் பொரியல் செய்து, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.
- 3-4 மாதங்களுக்கு தினமும் காலையில் ஒரு தக்காளியை சாப்பிட்டு வர, உடலில் உள்ள கொழுப்பு அளவு கட்டுப்பாட்டுன் இருப்பதோடு, கொழுப்புக்கள் குறைந்து, உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும்.
- தினமும் மோரில் கேரட்டை அரைத்து கலந்து குடித்து வர, உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.