காய்ச்சலுக்கான சில வீட்டு வைத்தியங்கள்

உலர் திராட்சை

காய்ச்சல் அதிகமாக இருந்தால், 25 உலர் திராட்சையை அரை கப் நீரில் ஊற வைக்கவும். தண்ணீரில் உள்ள உலர் திராட்சையை கசக்கி, தண்ணீரை வடிகட்டவும். அரை எலுமிச்சை பழத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஜூஸை அதனுடன் சேர்த்து, அதனுடன் தண்ணீர் கலந்து கொள்ளுங்கள். இதனை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடிக்கவும்.

ஆலிவ் ஆயில் மற்றும் பூண்டு

இரண்டு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன் நசுக்கிய இரண்டு பூண்டை சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்த கலவையை ஒவ்வொரு பாதத்திற்கு அடியிலும் தடவிடவும். பின் பாதங்களை ப்ளாஸ்டிக்கை கொண்டு மூடிடவும். இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். ஆலிவ் எண்ணெய்யும், பூண்டும் காய்ச்சலுக்கு மிக அற்புதமான வீட்டு சிகிச்சைகளாகும்.

உருளைக்கிழங்கு

ஒரு உருளைக்கிழங்கை துண்டுகளாக வெட்டி, அதனை வினீகரில் பத்து நிமிடங்களுக்கு ஊற வைக்கவும். பின் நீங்கள் படுத்து கொண்டிருக்கும் போது அந்த துண்டுகளை உங்கள் நெற்றியில் வைத்திடவும். அதன் மீது துணி ஒன்றை போட்டு விடவும். 20 நிமிடங்களில் பலனை நீங்கள் காணலாம்.

துளசி

ஒரு டீஸ்பூன் துளசி இலைகளை ஒரு கப் வெந்நீரில் சேர்த்து, அதனை ஐந்து நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடவும். இதனை ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு முறை வரை குடிக்கவும். மறுநாளே அதிக காய்ச்சல் தானாக குறைந்துவிடும்.