வைரஸ் காய்ச்சல் குணமாக ஒரு எளிதான வீட்ட வைத்தியம்

தேவையான பொருள்

கற்பூரவள்ளி இலை 2 எண்ணிக்கை
சித்திரத்தை 10 கிராம்
மிளகு 7 எண்ணிக்கை
தண்ணீர் 200 மி.லி
வெற்றிலை 1
துளசி ஒரு கைப்புடி அளவு
சுக்கு சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • பிறகு சுக்கு,மிளகு மற்றும் சித்திரத்தை ஆகிய மூன்று பொருட்களையும் நன்கு இடித்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்கள் மற்றும் கற்பூரவள்ளி இலை,துளசி,வெற்றிலை ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொள்ளவும்.
  • மேலும் தண்ணீரை 100 மி.லி அடையும் வரை கொதிக்க விடவும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை தொடர்ந்து மூன்று நாட்கள் குடித்து வந்தால் வைரஸ் காய்ச்சல் மற்றும் சளி முற்றிலுமாக நீங்கும்.
சுக்கு
மிளகு
கற்பூரவள்ளி இலை
தண்ணீர்
சித்திரத்தை
வெற்றிலை
துளசி இலை