சிரங்கு நோய் மற்றும் தோல் நோய்களை குணமாக்க உதவும் தைலம்

தேவையான பொருள்

முருங்கை மரம் பட்டை 100 கிராம்
குப்பைமேனி இலை சாறு 50 மி.லி
விளக்கு எண்ணெய் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு முருங்கை மரம் பட்டையை நன்கு இடித்து சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • இதை போலவே குப்பைமேனி இலையையும் அரைத்து அதன் சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி விளக்கு எண்ணெய் மிதமான சூட்டில் சூடுபடுத்தவும் .
  • மேலும் விளக்கு எண்ணெய்யுடன் முருங்கை மரம் பட்டை சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  • அடுத்து குப்பைமேனி இலை சாறு சேர்த்து தைலமாக மாறும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பிறகு இந்த தைலத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இரவு நேரங்களில் தோல் நோய் உள்ள இடங்களில் தடவி காலையில் குளித்து வந்தால் தோல் நோய் முற்றிலுமாக நீங்கும்.
விளக்கு எண்ணெய்