வாயு பிரச்சனை குணமாக ஒரு அருமையான மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை

தேவையான பொருள்

சுக்கு 30 கிராம்
கொத்தமல்லி 10 கிராம்
மிளகு 15 கிராம்
சீரகம் 15 கிராம்
பனங்கற்கண்டு தேவையான அளவு
தண்ணீர் 300 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கபட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு மல்லி, மிளகு மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் தனிதனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • மேலும் வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு 300 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு தண்ணீரை மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்க்கவும்.
  • மேலும் இதனுடன் இடித்த சுக்கு மற்றும் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நீரை நன்கு கொதிக்க விடவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இப்போது அருமையான தேநீர் தயார்.
  • இதனை தொடர்ந்து குடித்து வந்தால் வாயு பிரச்சனை குணமாகும்.
மிளகு
சுக்கு
தண்ணீர்
கொத்தமல்லி
சீரகம்
பனங்கற்கண்டு