வறுத்து அரைக்கக் கொடுத்துள்ள பொருள்களைச் சேர்த்து நன்றாக வறுத்து, ஆறியதும் சிறிதளவு தண்ணீர்விட்டு விழுதாக அரைக்கவும்.
புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கரைத்து வடிகட்டவும். வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காயவிட்டு கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளிக்கவும்.
இதனுடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது உப்பு, புளிக்கரைசல் ஊற்றி (தேவையானால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்) நன்கு கொதிக்கவிடவும்.
கெட்டியான குழம்புப் போல் பதம் வந்ததும் இறக்கவும்.