fbpx

ஆஸ்த்மாவை சரி செய்யும் பிரண்டை

தேவையான பொருள்

பிரண்டைத் துண்டுகள் 6 – 8 கணு (துண்டுகள்)
புளி சிறிதளவு
பச்சை மிளகாய் 3
தேங்காய் அரை மூடி (துருவிக்கொள்ளவும்)
பூண்டு 4 பல்
கடுகு ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிதளவு
எண்ணெய் 2 தேக்கரண்டி
உப்பு தேவையான அளவு

செய்முறை

  • பிரண்டையை முருங்கைக்காய் துண்டு நீளத்தில் நறுக்கி, லேசாகச் சீவிக் கொள்ளவும்.

  • கையில் எண்ணெய் தடவிக்கொண்டு நன்றாகக் கழுவவும். வாணலியில் எண்ணெய்விட்டுச் சூடாக்கி, கடுகு, பெருங்காயத்தூள் தாளிக்கவும்.

  • இதனுடன் பிரண்டையைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  • பிறகு தேங்காய்த் துருவல், பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி இறக்கவும்.

  • ஆறிய பின் புளி, உப்பு சேர்த்துத் தண்ணீர் தெளித்து மிக்ஸியில் துவையலாக அரைத்து எடுக்கவும்.

சின்ன வெங்காயம்
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment